www.garudabazaar.com

RIP William Hurt : நம்ம மார்வெல் உலகுக்கு பேரிழப்பு! மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்கா: பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் மரணமடைந்தார்.

Marvel Cinematic Universe Actor RIP William Hurt Passed Away

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் புற்று நோயால் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 71. தனது 72-வது  பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே  வில்லியம் ஹர்ட் மறைவு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1970 களில் பல மேடை நாடகங்களில் தியேட்டர் ஆர்டிஸ்டாக நடிப்பு துறைக்குள் வந்தார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தில் விஞ்ஞானியாக நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்ளிட்ட  படங்களில் நடித்தவர். மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். 

Marvel Cinematic Universe Actor RIP William Hurt Passed Away

கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன் படத்தில் நடித்ததற்காக வில்லியம் ஹர்ட் ஆஸ்கார் விருது பெற்றார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். வில்லியம் ஹர்ட் கடைசியாக நடித்த தி கிங்க்ஸ் டாட்டர் படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது.

Marvel Cinematic Universe Actor RIP William Hurt Passed Away

People looking for online information on Marvel, RIP William Hurt, William Hurt will find this news story useful.