COBRA D Logo Top
www.garudabazaar.com

வெந்து தணிந்தது காடு 'இசக்கி புரோட்டா'.. இந்த பிரபல ஹோட்டல்ல மட்டும் தான் கிடைக்குமாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Isakki Parotta in Junior Kuppana

Also Read | அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தின் 11வது வருடம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த இதுவரை காணாத BTS Photos!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Isakki Parotta in Junior Kuppana

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Isakki Parotta in Junior Kuppana

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Isakki Parotta in Junior Kuppana

இந்நிலையில் பிரபல உணவகமான ஜூனியர் குப்பன்னா நிறுவனத்தின் அனைத்து கிளை உணவகங்களிலும் இன்று மாலை 6:03 மணியில் இருந்து வெந்து தணிந்தது காடு படத்தின் "இசக்கி புரோட்டா" கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த 'இசக்கி புரோட்டா' காரணம் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | விஷால் நடிக்கும் 'லத்தி'.. சாந்தமான லுக்கில் புதிய போஸ்டர்! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Isakki Parotta in Junior Kuppana

People looking for online information on Isakki Parotta, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu Movie will find this news story useful.