ஊரடங்கிலும் சென்னை-28 பசங்களுக்கு கிரிக்கெட்தான்.! வெங்கட் பிரபு ஸ்டைல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை-28 நடிகர்கள் நடித்துள்ள புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

வெங்கட் பிரபு எடுத்த புதிய திரைப்படம் | venkat prabu new lockdown film with chennai 28 stars

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். சென்னை-28 படத்தில் நடித்த நடிகர்கள், அவரவர் வீட்டில் இருந்தபடி கிரிக்கெட் விளையாடுவது போல இந்த வீடியோவை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து, அதன் பாதுகாப்பு குறித்து வெங்கட் பிரபு ஸ்டைலில் அவரின் நடிகர்கள் பேசியுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

ஊரடங்கிலும் சென்னை-28 பசங்களுக்கு கிரிக்கெட்தான்.! வெங்கட் பிரபு ஸ்டைல் வீடியோ. வீடியோ

Entertainment sub editor