வடிவேலு ஸ்டைலில் விரட்டிய டிரோன்.! கிரிக்கெட் ஆட வந்து சிதறிய பசங்க.. சேலம் போலீஸ் செம வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்சேலம் போலீஸார் ஒரு செம காமெடியான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் வெளியில் சுற்றுவதால், டிரோன் கேமராக்களை கொண்டு போலீஸார் கண்கானித்து வருகின்றனர். இதனிடையே திருப்பூரில் கேரம் போர்ட் ஆடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை கண்டு சிதறிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் சேலம் போலீஸார் ட்விட்டரில் ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை கண்டு தெறித்து ஓடுகின்றனர். வடிவேலுவின் காமெடி வசனங்களோடு, டிரோன் கேமராவிடம் இருந்து மறைய இளைஞர்கள் செய்யும் அலப்பறைகளை தொகுத்து, ''அதே காமெடி, சேலம் மாநகரிலும்'' என பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.
அதே காமெடி சேலம் மாநகரிலும் 😄😄😄 (நகர மலை அடிவாரத்தில்) pic.twitter.com/uyvkPR032o
— salemcitypolice (@Salemcitypolice) April 17, 2020