Reliable Software
www.garudabazaar.com

பிரேம்ஜி இசையில், வைபவ் & வாணி போஜன் நடிக்கும் புதிய படம் OTT-யில் ரிலீஸ்.. வெளியான தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ZEE5 ஒரிஜினல் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிக்கும் படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’.

Vaibhav vani bhojan starring movie OTT release Premji music

ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றி அடைந்ததற்கு பிறகு நடிகர் வைபவ், நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

அனைத்து சாரரையும் திருப்திப்படுத்தும் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பல நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற மொழி, பயணம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.

இப்படத்தைத் மங்கி மேன் கம்பெனி தயாரித்துள்ளது. பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைக்கிறார்.

ALSO READ: "வந்துருவார்னு நம்பிருந்தேன்".. வெங்கட் பிரபு, பிரேம்ஜி தாயார் மரணம்.. சிம்பு பட தயாரிப்பாளர் உருக்கம்!

Tags : Zee5

Vaibhav vani bhojan starring movie OTT release Premji music

People looking for online information on Zee5 will find this news story useful.