www.garudabazaar.com

வாணி போஜன் கைகளில் டஜன் படங்களா?.. தெரியவந்த செம்ம அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு உயர்ந்த நடிகைகள் குறைவானவர்கள் தான்.

Vani Bhojan upcoming movies updates வாணி போஜன்

விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களின் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். பின்னர் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் தோன்றிய வாணி போஜன் வெள்ளித்திரையில் பல படங்களை கைகளில் வைத்து இருக்கிறார். முன்னதாக அஷோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சீயான்60 படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் ஆக்சஸ் பிலிம்ஸ் பேக்டரி தயாரிப்பில் பரத் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதேபோல் ஜீ-5ல் ஒளிபரப்பாகவிருக்கும் படத்துக்காக வைபவுடன் இணைந்து நடிக்கிறார்.

இதேபோல் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து நடிக்கிறார். காசினோ என்னும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இவற்றைத் தவிர பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். வாணி போஜன் ரசிகர்கள் இப்படி கிட்டத்தட்ட டஜன் படங்களை கைகளில் வைத்திருக்கிறாரா வாணி போஜன்? என்று உற்சாகத்தில் உள்ளனர்.

ALSO READ: “இத பாக்கும் போதெல்லாம் அழுகை வருது!”... பிரபல காமெடி நடிகர் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vani Bhojan upcoming movies updates வாணி போஜன்

People looking for online information on Trending, Vani Bhojan, VijayTelevision will find this news story useful.