"காலத்துக்கும் நீ வேணும்.." வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ?.. வெளியான அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மாநாடு திரைப்படம், கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி இருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.
மாநாடு படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக, பத்து தல மற்றும் கொரோனா குமார் திரைப்படங்களின் படப்பிடிப்பிலும் சிம்பு விரைவில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
மூன்றாவது முறை..
இதனிடையே, வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கவுதம் - சிம்பு கூட்டணி, மீண்டும் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.
இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், சிம்புவுடன் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான லுக்கில் சிம்பு
இதன் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் திரைப்படம் போல இல்லாமல், கிராமத்தில் நடக்கும் கதை போல தோன்றி இருந்தது. சிம்புவும் முன்பு போல இல்லாத வித்தியாசமான லுக் ஒன்றிலும் வருகிறார். வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு முடிந்த பின், புதிய அப்டேட்கள் எதுவும் வராமல் இருந்த நிலையில், முதல் சிங்கிள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கிள் அப்டேட்..
இதனையடுத்து, சிங்கிள் பெயர், நாளை வெளியாகும் நேரம் மற்றும் பாடலாசிரியர் யார் என்பதும் பற்றி, அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போது வெளிவந்துள்ளது. "காலத்துக்கும் நீ வேணும்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை தாமரை எழுதி உள்ளார். நாளை மாலை 6:30 மணிக்கு பாடல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பாடலை பாடியது யார் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. மெலோடி சாங் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடியுள்ளது யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
"காலத்துக்கும் நீ வேணும்.." வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ?.. வெளியான அப்டேட் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Mani Ratnam And AR Rahman's Ponniyin Selvan Movie Sound Recording At Nungambakkam Studio
- A R Rahman And Shreya Ghoshal Combo's Iravin Nizhal First Single Out Maayava Thooyava
- STR, Gautham Menon, AR Rahman's Vendhu Thanindhathu Kaadu First Single Update
- Simbu Gautham Menon ARR VTK First Single Update
- AR Rahman Yuvan Recent Posts Went Viral Regarding Tamil
- AR Rahmans Maajja Oraganising YAALL Music Festival
- Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Shooting Wrapped Up
- AR Rahman Shared Thamizhangu Pic Artist Santhosh Narayanan
- Bharathiraaja Invites R Parthiban AR Rahman Iravin Nizhal Music Launch
- Harris Jayaraj Musical Legend Movie First Single Update
- National Award Winning AR Rahman Scoring For Mom The Movie
- National Award Winning AR Rahman Scoring For Mom The Movie
தொடர்புடைய இணைப்புகள்
- தன் குரலில் அனைவரையும் உருக வைத்த Surmukhi😍 VTV Vibes On The Floor💕 #StarSinger #Behindwoods #Shorts
- ക്ഷുഭിതനായി കാണികൾക്കിടയിലേക്ക് മൈക്ക് വലിച്ചെറിഞ്ഞ് നടൻ പാർത്ഥിപൻ. സത്യത്തിൽ നടന്നതെന്ത്?
- Tension ஆகி Mic எறிந்த Parthiban... "AR Rahman கிட்ட வர 20 வருஷம் ஆயிடுச்சு" | Iravin Nizhal Event
- KPY Bala-னா Comedian-னு நினைச்சியா Performer-டா😎VIP Dhanush-ஆக மாறிய KPY Bala🔥 #StarDancer #Shorts
- "Love பண்ணலன்னு சொல்லும்போது மனசே நொறுங்கிடுச்சு Sir..." KPY BALA Emotional
- OMG😳Dhanush Dialogue Simbu Mannerism-னு எல்லாத்தையும் பிரிச்சு மெஞ்ச Bala🤩Counter King Live Dubbing🔥
- "இதானா ! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீங்க கொடுக்குற சுதந்திரம்..?" | A R RAHMAN | HINDI IMPOSITION | #shorts
- "எங்க தமிழ் தாயை இப்படி பேய் போல வரையலாமா ?"| சர்ச்சையான தமிழன்னை விவகாரம்'| #shorts
- "இந்தி வேண்டாம்ன்னு சொல்லல... திணிக்காதீங்கன்னு சொல்றோம்!"-சர்ச்சையான தமிழன்னை விவகாரம்| A R RAHMAN
- "இந்தி UNITY யை கொடுக்கும்ன்னு எப்படி நம்புறீங்க ?"| A R RAHMAN | #shorts
- "தமிழனுக்கு இந்தியே அந்நிய மொழிதான் !"- 'சர்ச்சையான தமிழன்னை விவகாரம்' | A R RAHMAN | DIGITAL DEBATE
- "தமிழன்னைய கருப்பா காட்டி அசிங்கப்படுத்தாதீங்க..!"- 'சர்ச்சையான தமிழன்னை விவகாரம்' | A.R.RAHMAN