"என் வாழ்க்கை கதை இதுதான்"… வாவ்.. நடிகை Rashmika Mandanna-வின் க்யூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனா சுல்தான் படத்துக்கு பிறகு தமிழில் ‘தளபதி 66’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Actress Rashmika mandanna shared video went viral

National crush…

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party என்ற படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார்.

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியால் இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தொடர் வெற்றிப் படங்களாலும், சமூகவலைதளங்களில் செய்யும் குறும்புகளாலும் ரசிகர்கள் இவரை ‘National crush’ என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

Actress Rashmika mandanna shared video went viral

தளபதி 66…

விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கும் புதிய படமான ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த படத்தின் பூஜையில் அவர் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார். பூஜையில் விஜய்யோடு ராஷ்மிகா இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. விஜய்யோடு இருக்கும் உற்சாகத்தில் முகம் முழுவதும் மகிழ்ச்சியாக ராஷ்மிகா கொடுத்த ரியாக்ஷன்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதில் ஒரு புகைப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு திருஷ்டி முறிப்பது போல இருக்கும் இணையத்தில் வைரலானது.

Actress Rashmika mandanna shared video went viral

Story of my life…

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணயத்தில் வைரலாகி வருகிறது. அதில் சோஃபா ஒன்றில் படுத்து தூங்கும் அவரின் வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் கேப்ஷனாக ‘என்னுடைய வாழ்க்கை கதை’ எனக் குறிப்பிட்டு அழுவது போன்ற ஸ்மைலி ஒன்றையும் இணைத்துள்ளார்.

Actress Rashmika mandanna shared video went viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rashmika mandanna shared video went viral

People looking for online information on Instagram, Rashmika will find this news story useful.