RRR Others USA
www.garudabazaar.com

தேசிய விருது வென்ற இசையை உணர்வுப்பூர்வமாக வாசித்த A.R. ரகுமான்! செம SOULFUL வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துபாய்: தேசிய விருது வென்ற இசை கோர்வையை இசைப்பியல் ஏ ஆர் ரகுமான் வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

National Award Winning AR Rahman Scoring for Mom the movie

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

National Award Winning AR Rahman Scoring for Mom the movie

தற்போது  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார். இயக்குனர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படமும் குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக துபாயில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.

'Dubai Expo 2020' யில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார் ரஹ்மான். தொடர்ந்து, 'Dubai Expo'வில், ரஹ்மானை போல இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் நடத்திருந்தது. அந்த சமயத்தில், ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு விசிட் அடித்திருந்தார் இளையராஜா.

National Award Winning AR Rahman Scoring for Mom the movie

ரஹ்மான் மற்றும் இளையராஜா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிக லைக்குகளை அள்ளி இருந்தது. இதன் பிறகு, தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போதும், ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் வெளியான நடிகை ஸ்ரீ தேவி நடித்து போனி கபூர் தயாரித்த மாம் படம் இசையமைப்புக்கு தேசிய விருது வென்றது. இந்த படத்தின் BTS பின்னணி இசையை A R ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 

 

தொடர்புடைய இணைப்புகள்

National Award Winning AR Rahman Scoring for Mom the movie

People looking for online information on A R Rahman, BTS, Dubai expo, MK Stalin, Mom, National Award, National Award Winning will find this news story useful.