Beast Others
www.garudabazaar.com

செம்ம... சர்வதேச இசைக்கலைஞர்களின் சங்கமம்… ரஹ்மானின் maajja நடத்தும் ‘யாழ்’ இசைத் திருவிழா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஹ்மான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் யாழ் இணையவழி இசைத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது.

AR Rahmans maajja oraganising YAALL music festival

Also Read | ”ஆக்ஷன் படம் எடுக்க class எடுத்திருக்கிறார்”… சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் செம்ம review!

சர்வதேசக் கலைஞர்கள்…

ஏப்ரல் 14-15 விழாவில் , இணை நிறுவனர் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர, நம் நாட்டு நட்சத்திரங்களான சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், ஷாஷா திருப்பதி, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆகியோருடன், தெற்காசிய புலம்பெயர்ந்த கலைஞர்களான முகன் ராவ், ஷான் வின்சென்ட் டி பால் போன்ற கலைஞர்களுடன் , யங் ராஜா, Navz-47, Cartel Madras ஆகியோருடன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.  யாழ் திருவிழா இணையத்தில் YouTube மற்றும் விஜய் மியூசிக்கில் ஏப்ரல் 14-15 தேதிகளில் திரையிடப்படவுள்ளது.  ஏப்ரல் 2022 -, மாஜாவின் ஆன்லைன் உலகளாவிய யாழ் திருவிழா, YouTube மற்றும் பிரபல இசை சேனலான விஜய் மியூசிக்கில் ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

AR Rahmans maajja oraganising YAALL music festival

இரண்டு நாள் இசைத் திருவிழா…

மாஜா நிறுவனத்தின் இணை நிறுவனர் ரஹ்மான் அவர்களால்  நிர்வகிக்கப்படும் தெற்காசிய கலைஞர்களுக்கான உலகளாவிய மாஜா தளம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு,  யாழ் திருவிழாவிற்காக, 34 கலைஞர்கள்  ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர், அதில் தமிழ் திரைப்படத் துறையில் இருந்து வரும் இந்திய மற்றும் உலகத் திறமையாளர்களின் பெயர்களும் அடங்கும். ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும், இந்த இரண்டு நாள் ஆன்லைன் திருவிழா - YouTube ல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும், மற்றும் தமிழ் இசை சேனலிலும் திரையிடப்பட உள்ளது.

சுயாதீனக் கலைஞர்கள்…

இந்த இசை நிகழ்ச்சிக் குறித்து பேசியுள்ள மாஜாவின் CEO நோயல் கீர்த்திராஜ் “ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானதுதான் மாஜா. முதன்மையான உலகளாவிய இசை விழாவாக முதலில் டிஜிட்டல் திருவிழாவாக கற்பனை செய்யப்பட்ட யாழின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து, சுதந்திர இசைக்காக தென்னிந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதாகும்.

AR Rahmans maajja oraganising YAALL music festival

சுதந்திரமான இசை மற்றும் கலைஞர்களை இதுவரை கண்டிராத அளவில் மாற்றும் விதத்தில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். யாழின் நோக்கம் புதிய யோசனைகளை, நீங்கள் விரும்பும்படியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாகும். சிறந்த திறமையான இசைக்கலைஞர்கள் மற்றும் புதிய இசையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில்  வரவிருக்கும் டிஜிட்டல் பதிப்பு ஒரு முக்கிய முதல் படியாக இருக்கும்.”எனக் கூறியுள்ளார்.

பங்குபெறும் கலைஞர்கள்…

மேலும் “இந்த நிகழ்வில் முன்னணி இசையமைப்பாளர்கள் ரஹ்மான் மற்றும் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் ஷாஷா திருப்பதி, பிரவின் சைவி, சக்தி அமரன், மாளவிகா சுந்தர், டீஜே, சத்யபிரகாஷ், இசை தயாரிப்பாளர்கள் ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், டென்மா, கலைஞர்கள் கேபா ஜெர்மியா, முகன் ராவ், சியன்னோர். ஆலப் ராஜு, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் மற்றும், சென்னையிலிருந்து Oorka மற்றும் Staccato போன்ற இசைக்குழுக்கள் பங்குபெறுகின்றனர். ” எனக் கூறியுள்ளார்.

மேலும் “இந்த பெருமை மிகு கலைஞர்களுடன், Toronto வில் இருந்து ஷான் வின்சென்ட் டி பால், Navz-47, Two’s A Company, Cartel Madras, Magisha, Sarika Navanathn, n X t Duo மற்றும் AllMixedUp (AMU), சிங்கப்பூரைச் சேர்ந்த சத்தியா மற்றும் யுங் ராஜா, R&B பாடலாசிரியர் பிரிட், இங்கிலாந்தைச் சேர்ந்த பலதுறை தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் S.A.M மற்றும் தா மிஸ்ட்ரோ, சுவிட்சர்லாந்தில் இருந்து ஹிப்-ஹாப் கலக்டிவ் FSProd மற்றும் CLEO VII, சூப்பர் ஸ்டார் கலைஞர் முகன் ராவ் மற்றும் மலேசியாவில் இருந்து பாடகர் RK அர்வின், லாஸ் -ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கலைஞர் சுவி மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த பாடகர்-பாடலாசிரியர் ரோலக்ஸ் ராசாத்தி மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பாடகர் கணவ்யா என உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் இந்நிகழ்விக் இருப்பார்கள்.  யாழ் திருவிழா இந்த கலைஞர்களுக்கு ஒரு பிரபல்யத்தை வழங்கும், இவர்களில் பெரும்பாலோர் பார்வையாளர்களுக்கு புதிய பெயர்கள் அல்லது தமிழ் திரையுலகின் ஒரு பகுதியாக இருக்கும்போது ஒரு சுயாதீன கலைஞராக வேண்டும் என்ற கனவுகளை எப்போதும் கொண்டுள்ளவர்கள்.” எனக் கூறியுள்ளார்.

இந்த  டிஜிட்டல் திருவிழா இரண்டு நாட்களில் மொத்தம் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

Also Read | “பெத்தவுகளுக்குக் கூட அடிக்க உரிமையில்ல… ஆனா போலீசுக்கு…” நடிகர் சூரியின் சல்யூட்!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahmans maajja oraganising YAALL music festival

People looking for online information on AR Rahman, AR Rahmans maajja, YAALL music festival will find this news story useful.