விமல், ஓவியா நடிப்பில் கடந்த கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது.
![Vemal and Oviya Helan's Kalavani 2 sneak peek video is Out Vemal and Oviya Helan's Kalavani 2 sneak peek video is Out](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vemal-and-oviya-helans-kalavani-2-sneak-peek-video-is-out-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த, விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, சற்குணம் இந்த இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில், விமலிடம் ஒருவர், உங்களுக்கு கவர்னர நல்லா தெரியுமாமே, என் தம்பிக்கு காலேஜ் சீட் வேணும், கொஞ்சம் வாங்கிக்கொடுக்க முடியுமா ? என்று கேட்கிறார். இதனை பின்னாடி நின்று கேட்கும் சரண்யா பொன்வண்ணன் மிகவும் பெருமையாக ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.
பின்னர் கவர்னரிடம் பேசுவது போல ஃபோனை காதில் வைத்து, குச் குச் ஹோத்தா ஹே ஜி, குரோர் பனேகா குரோர் பதி ஜி என ஹிந்தி பேசுவது போல் சீன் போடுகிறார். இந்த காட்சி பெரும் ரகளையாக இருக்கிறது.
''குரோர் பனேகா குரோர் பதி ஜி, 2ஜி.....'' - KALAVANI 2 படத்தில் இருந்து வெளியான செம COMEDY சீன் வீடியோ