‘ஜானி ஜானி எஸ் பாப்பா… புதுசா இப்ப ஒரு பாப்பா’… ‘வீட்ல விசேஷம்’ ஜாலியான Daddy பாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வீட்ல விஷேசம் படத்தின் டாடி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

R J balaji Veetla vishesham movie daady song released

Also Read | Walking Stick உதவியுடன் நடந்த திவ்ய தர்ஷினி… ஆனா அதே எனர்ஜி… கவனம் ஈர்த்த வீடியோ

R J பாலாஜி…

பண்பலை தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த அவர் LKG, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனம் பெற்றுள்ளார்.

Veetla vishesham movie daady song released

வீட்ல விசேஷம்…

அந்த படங்களை அடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது.

Veetla vishesham movie daady song released

Daddy பாட்டு…

இதையடுத்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Daddy பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. டிரைலரிலேயே சத்யராஜ் மற்றும் ஊர்வசி தம்பதியினருக்கு 50 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பது சம்மந்தமான கதை என்பதை கோடிட்டு காட்டி இருந்தனர். இந்த பாடலின் அந்த விஷயத்தால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மகனான R J பாலாஜி ஆகியோர் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியுள்ளனர். பாடல் வரிகள் அதற்கேற்றார்போல எளிமையாகவும், அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. பாடலை பா விஜய் எழுத கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.  பாடலை கிரிஷ்ஷுடன் இணைந்து பாலாஜியும் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Veetla vishesham movie daady song released

Also Read | “விஜய்யும் ரஜினியும்தான் என்னோட…” ஆடியோ வெளியீட்டில் மாஸ் காட்டிய ‘லெஜண்ட்’ சரவணன்

தொடர்புடைய இணைப்புகள்

R J balaji Veetla vishesham movie daady song released

People looking for online information on ஆர் ஜே பாலாஜி, வீட்ல விசேஷம், Daady song release, RJ Balaji, Veetla vishesham movie, Veetla vishesham movie updates will find this news story useful.