www.garudabazaar.com

சிறுமியின் கியூட்டான நடிப்பு.. கைதட்டி உற்சாகப்படுத்திய AK..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீரம் படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Veeram Movie BTS Video AK appreciates Kid acting

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். 90களின் தொடக்கத்தில் இருந்தே ஏகோபித்த ரசிகர்களை இன்றளவும் பெற்று வரும் நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார்.

நடிகர் அஜித்குமார் அண்மை காலங்களாக H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, அதனை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். வலிமை திரைப்படம் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது அஜித்குமார் நடிப்பில் மீண்டும் H.வினோத் இயக்கக்கூடிய புதிய திரைப்படத்துக்கு துணிவு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படம் உருவாக இருக்கிறது.

அண்மையில் ஐரோப்பா நாடுகளான பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் சென்ற பின்னர்,  நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் வீரம் படத்தின் BTS வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இதில், தமன்னா, நாசர், சந்தானம், ரமேஷ் கண்ணா, விதார்த் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் யுவினா பார்த்தவி-யும் நடித்திருந்தார். AK -விடம் அவர் படத்தில் பேசும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அப்போது ட்ரெண்ட் ஆகியது.

இந்நிலையில், இப்படத்தின் BTS வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்த்தவி,"போறபோக்க பார்த்தா எனக்கே உங்களை பிடிச்சிடும் போலயே" எனும் டயலாக்கை கியூட்டாக பேச, அதனை கேட்டு, அஜித் குமார் மற்றும் விதார்த் பாலா ஆகியோர் சிரிக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Veeram Movie BTS Video AK appreciates Kid acting

People looking for online information on Ajith Kumar, AK, Veeram, Yuvina Parthavi will find this news story useful.