VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. பிரபல 80s ஹீரோயின் பகிர்ந்த சூப்பர் BTS.. கூட இவங்க வேற இருக்காங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடிகர்கள் பிரபு & சரத்குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Varisu Movie BTS Photo of Kushbu Prabhu Sarathkumar

தளபதி விஜய்யின் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். வாரிசு படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

Varisu Movie BTS Photo of Kushbu Prabhu Sarathkumar

தளபதி விஜய் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியின்  'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழில் 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் 'வாராசுடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது, ​​இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில்  இப்படப்பிடிப்பில் நடிகை குஷ்பு, நடிகர்கள் பிரபு & சரத்குமார் உடன் எடுத்த   போட்டோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வாரிசு படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Tags : Vijay, Varisu

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Movie BTS Photo of Kushbu Prabhu Sarathkumar

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.