VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

Varisu : தளபதி விஜய் fansக்கு "அடுத்த ட்ரீட் ரெடியாகிட்டே இருக்கு".. வாரிசு படத்தின் புதிய அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோரது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் விஜய் நடிப்பிலான தளபதி 66 படத்தை தயாரிக்கிறது.

Thalapathy Vijay Varisu 100th day shooting completed today

வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர்.

 Thalapathy Vijay Varisu 100th day shooting completed today

இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ்.தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

 Thalapathy Vijay Varisu 100th day shooting completed today

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணி உள்ளது. அதே போல, இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே. சூர்யாவும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேகமாக தகவல் கிடைத்திருந்தன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளி வரவில்லை. நடிகர் விஜய் தான் வாரிசு பட இயக்குனரிடம், எஸ்.ஜே.சூர்யாவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கும் முனைப்பை முன்னெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

 Thalapathy Vijay Varisu 100th day shooting completed today

இதனிடையே வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சுடன் நடந்து வந்தது. முன்னஹாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக தெலங்கானா உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது.  ​ இதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் ஒரு நீண்ட மற்றும் முக்கியமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் 100வது நாள் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்தியேக தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை திரையில் காண்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து உருவாகும் பிரம்மாண்ட தமிழ்-தெலுங்கு திரைப்படம் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu 100th day shooting completed today

People looking for online information on SJ Suriya, Sri Venkateshwara Cine Chitra, SS Thaman, Thalapathy 66, Thalapathy Vijay, Thalapathy66, Vamsi Paidipally, Varisu, Vijay will find this news story useful.