VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

"ஷார்ட்டா தெரிவேன்-னாங்க" – PS1 இசை விழாவில் அணிந்த புடவை குறித்து டிடி.. இன்ஸ்டாவில் பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி டிடி மூலம் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக 90கள் முதலே திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

you will look short, DD over her saree in PS1 audio launch Saree

இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி மக்கள் மனதில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அண்மைக் காலங்களாக அடிக்கடி சுற்றுலா சென்றுவந்த டிடி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாலத்தீவிற்கு சென்றிருந்தார். இது தொடர்பான பல புகைப்படங்களை தமது வலைப்பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். அப்போது தமது ஆடைகள் குறித்து வந்த சில எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்த டிடியின் பதிவு வைரலானது.

நிலையில் சமீபத்தில் இவர் அந்தமானுக்கு சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கே கடற்கரையில் அமர்ந்த வாறு பீச் உடையில் போஸ் கொடுத்திருந்தார். அதில், ஆடையில் ஒன்றும் இல்லை. அனைத்தும் நம் மனநிலையில்தான் இருக்கிறது என்றும், அந்தமானில் இப்படியான ஆடையை அணிந்து கொண்ட தமக்கு பாதுகாப்பு இல்லாத உணர்வோ, அசௌகரியமான உணர்வோ ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் அப்பதிவில், பெண்களும் இரட்டை பாலினத்தவரும் தங்கள் கனவுகளை நோக்கி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்து வரவேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில்தான் தொகுப்பாளினி டிடி சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவை தொகுத்து வழங்கிய டிடி, தான் கட்டி சென்ற புடவை குறித்து தற்போது பதிவிட்டுள்ளார். அதில்,  “பெரிய பார்டர் வைத்த புடவையை கட்டாதீர்கள்.. நீங்கள் உயரம் குறைந்தவர் போல காணப்படுவீர்கள் என சொன்னார்கள். இவற்றையெல்லாம் நான் பலமுறை கேட்டிருக்கிறேன்..

ஆனாலும் ஒவ்வொருமுறையும் நான், ‘பரவால்ல டிடி நீ கட்டிக்கோ’ என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.  உங்கள் மூளைத்திறன், உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் வார்த்தைகள்தான் உயர்வாக காட்டுமே அன்றி,  உங்கள் உடல் உயரம் அல்ல, அனைத்து அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

you will look short, DD over her saree in PS1 audio launch Saree

People looking for online information on DD Neelakandan, Dhivya Dharshini, Vijay tv DD will find this news story useful.