VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

PS1 இசை விழாவுல "இந்த ஃபோட்டோவ" பாக்காம விட்டுட்டமே.. டிடி பகிர்ந்த செம Pic..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி டிடி மூலம் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக 90கள் முதலே திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

3 Greatest of All time Viral rajini kamal maniratnam pic PS1

இந்நிலையில் தான் சமீபத்தில்தான் தொகுப்பாளினி டிடி சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கினார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிடி, தமது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கமல் மற்றும் ரஜினியின் பின்னால் நின்றபடி பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குநர் மணிரத்னம் படத்தின் காட்சிகளை திரையில் காண்கிறார். இவர்கள் மூவருக்கும் பின்னால் நின்று டிடி  ஒரு ஃபோட்டோவை கிளிக்கியிருக்கிறார்.

அதை தமது இன்ஸ்டாவில் பதிவிட்ட டிடி, “நாயகன் மற்றும் தளபதி திரைப்படங்களுக்கு பின்னால் இருப்பவரான மணிரத்னம், தனது  பொன்னியின் செல்வனை பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்போதுமே ஒரு பெரிய திரை மேதை தம்முடைய படைப்புகளுக்கு பின்னால் உயர்ந்து நிற்பார்.

அனைத்து காலங்களிலும் மூன்று மிகப்பெரியவர்கள் (ரஜினி, கமல், மணிரத்னம்).. இந்த ஒரு தருணத்தை பார்த்ததுமே இது வாழ்க்கையில் அரிதாக காணக்கிடைக்கும் ஒன்று என்பதை அறிந்து இதை போட்டோவாக கிளிக் பண்ணி விட்டட்டேன். அதை அவருடைய தீவிர ரசிகர்கள் மத்தியில் பகிர வேண்டும் என்று விரும்பினேன். இதயத்தில் இருந்து நன்றி” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

3 Greatest of All time Viral rajini kamal maniratnam pic PS1

People looking for online information on Dhivya Dharshini, Kamal Haasan, Mani Ratnam, Ponniyin Selvan part 1, Rajinikanth will find this news story useful.