''தளபதி சொன்னத ஃபாலோ பண்ணுங்க...'' - 'பிகில்' பட நடிகை சொன்ன யோசனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Varsha Bollamma tweets about Priyanka Reddy incident and Thalapathy Vijay

இதற்கு பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக '96' மற்றும் 'பிகில்' படங்களில் நடித்த வர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உங்கள் சகோதரிகளுக்கு பெப்பர் ஸ்பிரே பரிசளியுங்கள். பெப்பர் ஸ்பிரே ஆன்லைனில் கிடைக்கிறது. விலையும் குறைவு. உங்கள் சகோதரிகளுக்கும் தோழிகளுக்கும் இன்று ஒன்றை பரிசளியுங்கள். தளபதி சொன்ன மாதிரி இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யுங்க. இது சமூகத்துக்கு நிச்சயம் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.