www.garudabazaar.com

"ஏய் மாமே".. வெளியான 'வாரிசு' படத்தின் DELETED SCENE.. தளபதி வந்திறங்குனா மாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த  (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Varisu Movie Deleted Scene Released

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Thalapathy Vijay Varisu Movie Deleted Scene Released

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் தற்போது வரை வாரிசு படம் 300+ கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Varisu Movie Deleted Scene Released

சமீபத்தில் வாரிசு படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் பிரைம் வீடியோ, வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. வில்லன் பிரகாஷ் ராஜ் அலுவலகம் சென்று விஜய், வில்லனை மிரட்டும் காட்சியாக இது அமைந்துள்ளது. விஜய்யின் புதுவித குரல் மாடுலேஷன், கில்லி படத்தினை நினைவு கூர்ந்த கபடி வசனங்கள் மற்றும் உடல்மொழி ஆகியவற்றுடன் தமனின் பிண்ணனி இசையும் இந்த வீடியோவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu Movie Deleted Scene Released

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.