www.garudabazaar.com

புதிய படத்தில் பாலையாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை இவங்க தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: ஸ்ருதி ஹாசனைத் தொடர்ந்து புதிய படத்தில் பாலையாவுக்கு ஜோடியாகிறார் பிரபல தமிழ் நடிகை.

Varalaxmi Sarathkumar On Board For Nandamuri Balakrishna NBK 107

தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தை இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். போயபதி சீனு இயக்கத்தில் வெளியான 'அகண்டா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் பாலகிருஷ்ணா தற்போது நடிக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

Varalaxmi Sarathkumar On Board For Nandamuri Balakrishna NBK 107

எஸ் தமன் இசையமைப்பு செய்ய, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பைக் கவனிக்கிறார் மற்றும் ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ராம்-லக்ஷ்மண்  சண்டை இயக்குனராகவும், இப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக சந்து ரவிபதி பணியாற்றுகின்றனர். இம்மாதம் முதல் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசனைத் தொடர்ந்து வரலெட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். தற்போது வரலெட்சுமி சமந்தாவுடன் யசோதா படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல OTT-யில் வெளியாகப்போகும் BLOCKBUSTER புஷ்பா திரைப்படம்! எப்போ? எந்த OTT தெரியுமா?

 

Varalaxmi Sarathkumar On Board For Nandamuri Balakrishna NBK 107

நடிகர்கள்: நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார்

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம்: கோபிசந்த் மலினேனி

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர்

பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இசையமைப்பாளர்: தமன் எஸ்

DOP: ரிஷி பஞ்சாபி

எடிட்டர்: நவின் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்

வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா

சண்டைகள்: ராம்-லக்ஷ்மன்

CEO: சிரஞ்சீவி (செர்ரி)

இணை இயக்குனர்: குர்ரா ரங்கா ராவ்

நிர்வாக தயாரிப்பாளர்: சந்து ரவிபதி

லைன் தயாரிப்பாளர்: பால சுப்ரமணியம் கே.வி.வி

விளம்பரம்: பாபா சாய் குமார்

PRO: வம்சி-சேகர்

Varalaxmi Sarathkumar On Board For Nandamuri Balakrishna NBK 107

BREAKING: ஆஹா...அடுத்த சம்பவம் ரெடி! SUN PICTURES - விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய பட ஷூட்டிங் அப்டேட்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Varalaxmi Sarathkumar On Board For Nandamuri Balakrishna NBK 107

People looking for online information on கோபிசந்த் மலினேனி, பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், Gopichand Malineni, Mythri Movie Makers, Nandamuri Balakrishna, NBK107, Varalaxmi Sarathkumar will find this news story useful.