''எந்த பின்புலமும் இல்லாமல்...'' - சரத்குமார் குறித்து வரலக்ஷ்மி உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்புவுடன் இணைந்து 'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தாரைதப்பட்டை', 'சர்கார்', 'மாரி 2' என வித்தியாசமான, அதே நேரம் போல்டான கதாப்பாத்திரங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

Varalaxmi Sarathkumar shares an emotional post about her father | தனது தந்தை குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கம்

தற்போது அவரது நடிப்பில் கன்னி ராசி, வெல்வட் நகரம், சேஸிங், தெலுங்கில் கிராக் என அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன. இந்நிலையில் இன்று தந்தையர் தினம் என்பதால் தனது அப்பா சரத்குமார் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ''எப்பொழுதும் எனக்கு நீங்கள் இன்ஸ்பிரேஷன். எந்த பின்புலமும இல்லாமல் உங்களுக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளீர்கள். உங்களுக்கான இடத்தை உங்கள் கடின உழைப்பாழும், ஒழுக்கத்தாலும் அடைந்துள்ளீர்கள். இன்னும்  நீங்கள் பெரிய உயரத்தை அடைவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் என் ஹீரோ'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Varalaxmi Sarathkumar shares an emotional post about her father | தனது தந்தை குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கம்

People looking for online information on Sarathkumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.