www.garudabazaar.com

பிரபல OTT-யில் வெளியாகப்போகும் BLOCKBUSTER புஷ்பா திரைப்படம்! எப்போ? எந்த OTT தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பிரபல OTT-யில் வெளியாக உள்ளது அல்லு அர்ஜூன் நடிப்பில் BLOCKBUSTER ஆன புஷ்பா திரைப்படம்!

Pushpa the rise movie Releasing on Amazon prime

PAN INDIA - Pushpa

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு   டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Pushpa the rise movie Releasing on Amazon prime

 

BREAKING: ஆஹா...அடுத்த சம்பவம் ரெடி! SUN PICTURES - விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய பட ஷூட்டிங் அப்டேட்!

புஷ்பா வசூல் மழை

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 

Pushpa the rise movie Releasing on Amazon prime

புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

பொங்கலுக்கு வெளியாகும் PAN INDIA படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

புஷ்பா OTT

Pushpa the rise movie Releasing on Amazon prime

இந்நிலையில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி முதல் புஷ்பா திரைப்படம் பிரபல அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டர் மூலம் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Pushpa the rise movie Releasing on Amazon prime

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa the rise movie Releasing on Amazon prime

People looking for online information on Allu Arjun, Amazon Prime, அல்லு அர்ஜுன், புஷ்பா, Pan India, Pushpa, The Rise movie will find this news story useful.