www.garudabazaar.com

BREAKING: ஆஹா...அடுத்த சம்பவம் ரெடி! SUN PICTURES - விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய பட ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திண்டுக்கல்: சன் பிக்சர்ஸ் - விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய பட ஷூட்டிங் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகில் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.

திமுக அமைச்சர் குடும்பத்திற்கு சம்பந்தியாகும் வலிமை பட தமிழக வினியோகஸ்தர்! செம தகவல்...

அனுகீர்த்தி வாஸ்

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

இதில் ஐபிஎஸ் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் பொன்ராம் தனது முதல் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

 

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

திண்டுக்கல்

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. பொன்ராம் இயக்கிய முதல் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படமும் திண்டுக்கலில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றுடன் இந்த படத்தின் திண்டுக்கல் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

 

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட், தனுஷ் நடிப்பில் திரிச்சிற்றம்பலம், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு வெளியாகும் PAN INDIA படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

தொடர்புடைய இணைப்புகள்

Director Ponram - Vijay sethupathy 46 Dindigul schedule completed today

People looking for online information on Anukeerthy Vas, Dindigul, IPS, Police, Ponram, Sunpictures, Vijay Sethupathi, VJS46 will find this news story useful.