'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் சேதுபதி சங்கத் தமிழன், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.