www.garudabazaar.com

BBUltimate: நம்பி நாமினேட் பண்ணிய வனிதா.. கடைசியில் குண்டை தூக்கி போட்ட பாலாஜி.. சம்பவம் தரமானது தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 17, பிப்ரவரி 2022: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடி வழியே 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

போட்டியாளர்கள்..

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் சுரேஷ் சக்ரவர்த்தி முதல் வாரத்தில் எலிமினேட் ஆனார். தொடர்ந்து அடுத்த வாரத்தில் சுஜா வருணி எலிமினேட் ஆனார். சுஜா வருணியின் எலிமினேஷன் பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் அடுத்தடுத்த டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

ட்ரெண்டிங்கில் இருந்த வனிதா

கடந்த வாரங்களில் செலிபிரிட்டி பிரஸ்மீட், திருடன் - போலீஸ் டாஸ்க் என பலவற்றிலும் வனிதா விஜயகுமார் பேசுபொருளாக இருந்தார். முதல் வாரத்திலேயே காப்பி பொடி பிரச்சினை வனிதாவை சுற்றி வளைத்தது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வனிதா விஜயகுமார் அழுது புலம்பிய ஆடியோக்கள் வெளியாகி வைரலாகின.

Also Read: தனுஷூடன் ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் இளம் பெண் யாரு? வைரல் ஃபோட்டோவின் பின்னணி!

கன்ஃபெஷன் ரூமில் அழுத வனிதா

அதன்பின்னர் திருடன் போலீஸ் டாஸ்க் நடக்கும்போது ஹவுஸ் மேட்ஸ் பர்சனல் பொருட்களை டேமேஜ் செய்வதாக ஃபீல் பண்ணிய வனிதா, அந்த விளையாட்டின் பாதியில் இருந்து வெளியேறினார்.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

இதனிடையே தன்னை மட்டுமே பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் குறி வைப்பதாக வனிதா கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸிடம் முறையிட்டு கதறி அழுதார்.

80-களின் நினைவுகள்..

இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் 80-களின் காலகட்டங்களை நினைவுபடுத்தும் வாழ்க்கையும் அது தொடர்பான கதாபாத்திரங்களை போட்டியாளர்கள் ஏற்றும் பெர்ஃபார்ம் செய்து வருகின்றனர்.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

திரைப்படத்திலும் பொது வாழ்க்கையிலும் இருந்து 80-களின் காலக்கட்ட நினைவுகளை பேச்சு, நடை, உடை, பாவனைகளில் கொணர்வதே இந்த டாஸ்கின் முக்கிய நோக்கம். இதில் கேரக்டரை உணர்ந்து பாலாஜி நடிக்கவில்லை என வனிதா குற்றம் சாட்ட, அதற்கு பாலாஜியும் பதிலுக்கு பதில் பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

பிக்பாஸ் சொன்னதாக பாலாஜி அறிவித்த டாஸ்க்

இந்த நிலையில்தான் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் இந்த வாரம் டபுள் எலிமினேஷனுக்கு தயாராகும்படி பிக்பாஸ் கூற, பின்னர் பாலாஜி வந்து பேசும்போது, “பிக்பாஸ் ஒரு புதிய டாஸ்க் கொடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒருவரின் பெயரை சொல்லி எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்லியிருக்கிறார்.” என சொல்லிவிட்டு போகிறார். அப்போது வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸை எவிக்‌ஷன் செய்யுமாறு நாமினேட் செய்தார்.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

Also Read: "பொண்ணுங்க மட்டும் ஏன் டிக்கெட் எடுக்கல".. "அட.. வேர்ல்டுல எங்கயும் இப்படி இல்ல".. ருமேனியர் எடுத்த பரபரப்பு முடிவு

பாலாஜியை நாமினேட் செய்த வனிதா

அப்போது, “வெளியில் பாலாஜியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று பாலாஜி நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய Attitude அப்படி மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பது பாலாஜிக்கு புரியவில்லை!” என வனிதா தன்னுடைய கருத்தை தெரிவித்து பாலாஜியை எவிக்சனுக்கு நாமினேட் செய்கிறார். அதன் பிறகு பாலாஜி வந்து, வைத்தது தான் பெரிய ட்விஸ்ட்.. ஆம், அப்படி ஒரு குண்டை தூக்கி பாலாஜி போட்டிருக்கிறார்.

குண்டை தூக்கி பாலாஜி

அதன்படி, “பிக்பாஸ் இப்படியான ஒரு டாஸ்க்கை கூறவே இல்லை. இது நான் கொடுத்த டாஸ்க் தான்!” என்று கூறி அதிர வைத்துள்ளார். இது தெரியாமல் வனிதாவும் பாலாஜியைவே நாமினேட் செய்துவிட்டார். 

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

இப்படி பாலாஜி சொன்னதுமே சில பிக்பாஸ் போட்டியாளர்கள் முகமே மாறிவிட்டது. குறிப்பாக வனிதாவின் முகம் வெளிறிவிட்டது. கொஞ்சம் டென்ஷனாகி பாலாஜியை நோக்கி வனிதா, “இது சரியில்லை, இந்த வீட்டில் என்ன வேணாலும் செய்யலாம் என நினைக்கிறாயா?” என பேச இந்த ப்ரோமோ முடிகிறது. உண்மையில் பாலாஜி பிராங்க் செய்தாரா? இல்லை பிராங்க் செய்வதாச் சொன்னதே பிராங்க்கா? அதாவது உண்மையில் இது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் தானா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

ரசிகர்கள் ஆதரவு...

ஏற்கனவே பாலாஜி மற்றும் வனிதா இருவருக்கும் இடையிலான வாதங்கள் எங்கு சென்று முடிய போகிறது என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸ் இப்படி ஒரு பிராங்க் செய்திருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ரசிகர்கள் பலரும் பாலாஜி முருகதாஸுக்கு தொடர்ந்து தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதேபோல் வனிதாவும் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் தன் இருப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பல ரசிகர்கள் தெரிவிப்பதுடன் தங்களுடைய ஆதரவை வனிதாவுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த வார எலிமினேஷன்?

இவற்றை தொடர்ந்து இந்த வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் வந்து இந்த வாரம் யாரை எலிமினேஷன் ஆவதாக அறிவிக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் பதட்டமும் இப்போதே ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

இந்த 24 மணிநேர நேரலை பிக்பாஸ் நிகழ்ச்சியை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம் என்பதுடன், ஒரு மணி நேர சிறப்பு தொகுப்பு வீடியோவை இரவு 9 மணிக்கு அதே டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: அரபிக்குத்து பாட்டுக்கு வைரல் ஆகும் அனிருத் டான்ஸ்... 5 Take ஆனாலும் தெறிக்க விடுறாப்ல.. பரவும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BBUltimate Tami Balaji Murugadoss prank Vanitha Vijayakumar

People looking for online information on Balaji Murugadoss, Balaji Murugadoss prank, BBUltimate, BBUltimate Tami, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate Tamil, Vanitha, Vanitha Vijayakumar will find this news story useful.