www.garudabazaar.com
iTechUS

"நமக்குனு இருப்பது ஒரு குடும்பம்தானே.."..தியேட்டரில் எமோஷனல் ஆன ‘வாரிசு’ இயக்குநரின் தந்தை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

Vamshi Paidipally father emotional hug after watching varisu

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகியுள்ளது.

Vamshi Paidipally father emotional hug after watching varisu

வாரிசு படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும், நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தன.

Vamshi Paidipally father emotional hug after watching varisu

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்தபோது ஒரு மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணம் அரங்கேறி உள்ளது. ஆம், வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். 

இந்நிலையில் இதனை இயக்குநர் வம்சி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் திரைப்படம் முடிந்ததும் மகன் வம்சியை அவரது தந்தை ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்த எமோஷனலான தருணம் வீடியோவாக இணையத்தில் அதிகம் வைரல் ஆகி, பார்ப்போர் பலரையும் மனமுருக வைத்து வருகிறது.

"நமக்குனு இருப்பது ஒரு குடும்பம்தானே.."..தியேட்டரில் எமோஷனல் ஆன ‘வாரிசு’ இயக்குநரின் தந்தை.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vamshi Paidipally father emotional hug after watching varisu

People looking for online information on வாரிசு, Vamshi Paidipally, Vamshi Paidipally father, Varisu, VarisuAudioLaunch, Vijay, Vijay speech will find this news story useful.