Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

BREAKING: ரஜினி - நெல்சன் - SUN PICTURES இணையும் புதிய படத்தின் அறிவிப்பு எப்போ? தலைவர் வரார் டோய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் அப்டேட் கிடைத்துள்ளது.

Rajini movie with Nelson official announcement on tomorrow

நடிகர் RJ பாலாஜி வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபலமான சொகுசு கார்! விலை எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

பேச்சுவார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பங்கு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

Rajini movie with Nelson official announcement on tomorrow

எதிர்பார்த்தது போல் நாளை (10.02.2022) அன்று நெல்சன் - சன்பிக்சர்ஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஸ்ட் படத்தின் அறிவிப்பிற்கு வெளியானது போல இந்த படத்திற்கும் ப்ரோமோ வீடியோவுடன் அறிவிப்பு வெளியாக உள்ளது. 

நெல்சன் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Rajini movie with Nelson official announcement on tomorrow

சூப்பர் ஸ்டார் ரஜினி, சன்பிக்சர்ஸ் உடன் நான்காவது முறையாக இணைகின்றனர். இதற்கு முன் எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களை நடிகர் ரஜினி நடிப்பில் தயாரித்துள்ளனர்.

மலை உடைப்பு , ஆற்று மணல் கொள்ளையை விஜய் என்னைக்காவது கண்டிச்சுருக்காரா? சீமான் கேள்வி

தொடர்புடைய இணைப்புகள்

Rajini movie with Nelson official announcement on tomorrow

People looking for online information on Annaaththe, Enthiran, Kalanithi Maaran, Nelson, Petta, Rajini Next Movie, Rajinikanth, Sun pictures will find this news story useful.