Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20 புதிய படம்! ஷூட்டிங் தமிழ் நாட்டில் எங்க? எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காரைக்குடி: சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட் கிடைத்துள்ளது.

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

BREAKING: ரஜினி - நெல்சன் - SUN PICTURES இணையும் புதிய படத்தின் அறிவிப்பு எப்போ? தலைவர் வரார் டோய்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியானது.

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். 

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மார்ச் 25, 2022 அன்று டான் படம் ரிலீசாக உள்ளது.

சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சூரி, சதீஷ் ஆகியோரிடம் இணைந்து படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக தெலுங்கு - தமிழில் உருவாகும் இந்த படத்தில் பிரேம்ஜியுடன் நடிக்க இருப்பது கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

கடைசியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், கனா படத்தில் நடித்திருந்தாலும் இருவர்க்கும் சேர்ந்த காட்சிகள் இல்லை. சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில், டி. இமான் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தான் கடைசியாக சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் தோன்றினார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் நாளை (10.02.2022) முதல் துவங்குகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் நாளை காரைக்குடி செல்ல உள்ளார். நடிகர் பிரேம்ஜி அமரன் பிப்ரவரி 13 அன்று படக்குழுவுடன் இணைய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடிகர் RJ பாலாஜி வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபலமான சொகுசு கார்! விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan tamil telugu SK20 shooting at karaikudi

People looking for online information on Anudeep, Karaikudi, Navin Polishetty, Premji amaren, Sathyaraj, Sivarakarthikeyan, SK20 will find this news story useful.