www.garudabazaar.com

விஜய் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்! வலிமை படம் போலவே BEAST படத்திலும் இது இருக்காம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

Vijay Starring Beast Movie making video breaking Update

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

அஜித் நடிக்கும் வலிமை! தமிழை விட தெலுங்கில் இன்னும் தரமான சம்பவம் இருக்கு!

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Starring Beast Movie making video breaking Update

முன்னதாக டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக பிரத்யேக BTS புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் 125 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடைசி நாளில் விஜய் மற்றும் படக்குழு ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வலிமை படம் போலவே பீஸ்ட் படத்திற்கும் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை அதிதி ஷங்கர் எடுத்த புது அவதாரம்! ஆச்சரியத்தில் மீளாத ரசிகர்கள்

Vijay Starring Beast Movie making video breaking Update

விஜய் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்! வலிமை படம் போலவே BEAST படத்திலும் இது இருக்காம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Beast Movie making video breaking Update

People looking for online information on இயக்குனர் நெல்சன், பீஸ்ட், விஜய், Beast, Valimai, Vijay will find this news story useful.