www.garudabazaar.com

சிதற விடுறாங்களே.. 99-ல் வந்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ .. அப்படியே கண்முன் நிறுத்திய 2K Kids வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 07, பிப்ரவரி 2022:- தளபதி விஜய், நடிகை சிம்ரன், நடிகர் மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம், ‘துள்ளாத மனமும் துள்ளும்’.

Thalapathy Vijay Thulladha Manamum Thullum children viral video

துள்ளாத மனமும் துள்ளும் - பாட்டு படம்..

திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூழலுக்கு ஏற்ப அமைந்ததுடன், அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட் என்கிற பெயரை அடைந்தன.

Also Read: "40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு".. Bigg Boss வீட்டில் வனிதா உருக்கம்

குட்டி - ருக்கு..

இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய், சிம்ரனை தூரத்திலிருந்து பாட்டு பாடி காதலிப்பார். சிம்ரனுக்கு விஜய்யை குட்டி என்கிற பெயரில் தெரியும். ஆனால் அவரை பார்த்ததில்லை. சிம்ரனின் பெயர்ர் ருக்கு என்கிற ருக்குமணி. ஆனால் விஜய் சிம்ரனை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் குட்டியாக அல்லாமல் , குட்டி ரவுடியாக சிம்ரனுக்கு தெரிவார்.

Thalapathy Vijay Thulladha Manamum Thullum children viral video

கலெக்டராகும் ருக்கு - குட்டியின் தியாகம்

ஒரு கட்டத்தில் சிம்ரனின் கண் பார்வை, விஜய்யாலேயே பறிபோக, விஜய் தன் காதலை விடவும் முக்கியமாக கருதி, சிம்ரனின் கலெக்டர் கனவ நிறைவேற்ற போராடுவார். ஒரு கட்டத்தில் கலெக்டராகும் சிம்ரனுக்கு, போலீஸில் சிக்கியிருக்கும் விஜய்யை அடையாளம் தெரியாமல், குட்டி ரவுடி என நினைத்து போலீஸாரிடம் தண்டிக்க சொல்லி மேலும் ஒரு வார்த்தை சொல்லிவிடுவார்.

Thalapathy Vijay Thulladha Manamum Thullum children viral video

ஆனால் சிம்ரனுக்கு இந்த கலெக்டர் அந்தஸ்து உருவாகுவதற்கு விஜய் எத்தனையோ தியாகங்களை செய்து இருப்பார். அதில் வந்த ஒரு சிக்கலில்தான் போலீசில் மாட்டி கொண்டிருப்பார். இதை கடைசி காட்சிகளில் பத்து பதினைந்து பாய்ண்டு, வசனங்களை பேசாமல், ஒரு பாடலைப் பாடி முடிவுக்குக் கொண்டு வருவார் விஜய். அந்த பாடலை கேட்டதும் அத்தனையையும் மறந்து விட்டு விஜய்யை தேடி சிம்ரன் ஓடி வருவார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உருவான இன்னிசை பாடி வரும் பாடல் முக்கியமானது.

அப்படியே கண்முன் நிறுத்திய 2K Kids

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை அப்படியே தத்ரூபமாக ரீ-கிரியேட் செய்து இருக்கின்றனர் சில 2K Kids. அத்தனை பேரும் சுட்டி குழந்தைகள். நடிப்பதுடன் விஜய், சிம்ரன் மற்றும் அட்மாஸ்பியர் என துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கேரக்டர்களை கண்  முன் கொண்டு வந்ததுடன், குறிப்பிட்ட காட்சிகளை அப்படியே ரீ-கிரியெட் செய்து அசத்தி இருக்கின்றனர்.

Thalapathy Vijay Thulladha Manamum Thullum children viral video

இந்த காட்சிகள் இணையதளத்தில் வீடியோக்களாக வைரல் ஆகி வருகின்றன. இதை பார்த்த பலரும் இத்தனை சிறிய வயதில் இந்த குழந்தைகள் எவ்வளவு தத்ரூபமாக அப்படியே நடிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். திரைப்பட காட்சிகளில் இருக்கும் அதே போன்ற நடை, உடை, பாவனைகளை இந்த குழந்தைகள் இமிடேட் செய்து ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர்

ஃபிரேம் டூ ஃபிரேம்..

இந்த காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும், கிட்டத்தட்ட சினிமா போலவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் சில காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால் அந்த ஃபிரேமில் என்னென்ன இருக்குமோ,  அத்தனையும் இவர்கள் உருவாக்கிய இந்த ஃபிரேமிலும் இருக்கின்றன.

இந்த காட்சிகளை எல்லாம் அப்படியே இந்த குழந்தைகள் தற்போது உருவாக்கியிருக்கின்றனர். அதிலும் க்ளைமாக்ஸில் சிம்ரன் ஓடிவருவது போல் அந்த பெண் குழந்தை ஓடி வர பின்னால் அட்மாஸ்பியராக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் ஓடி வருகின்றனர். விஜய் போலவே எக்ஸ்பிரசன்களை கொடுக்க முயற்சிக்கும் அந்த சிறுவன் கலக்குகிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் இந்த குழந்தைகளை பாராட்டி வருகின்றனர்.

Also Read: "இதுவரை 5 சீசன் Bigg Boss-லயும் ஒரே ஒரு பொண்ணு தான் ஜெயிச்சாங்க... ஆனா அவங்களும் Bold இல்ல" .. வனிதா பேச்சு

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Thulladha Manamum Thullum children viral video

People looking for online information on Thalapathy, ThalapathyVijay, Vijay Movie will find this news story useful.