www.garudabazaar.com

வலிமை படம் எப்போ ரிலீஸ்? தியேட்டர் உரிமையாளர்கள் சொல்வது என்ன? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

valimai theatrical release date suggestions from theatre owners

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். இனி வரும் நாட்களில் படத்தின் அனைத்து பாடல்களும் இன்னும் பல போஸ்டர்களும் டீசர், டிரெய்லர்களும் வெளிவர இருக்கின்றன.

valimai theatrical release date suggestions from theatre owners

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மட்டும் இன்னும் முடிவாகாமல் உள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கலாம் என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். வலிமை படத்தை தவிர்த்து மற்ற அனைத்து பெரிய படங்களின் திரையரங்க வெளியீட்டு தேதிகளும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. குறிப்பாக அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. கே ஜி எஃப் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகிறது. ராஜமவுலி இயக்கும் RRR திரைப்படம் குடியரசு தின விழா அன்று வெளியாகிறது. அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

valimai theatrical release date suggestions from theatre owners

இந்நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 14 ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு வெளியானால் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை வலிமை படத்தால் உண்டாக்க முடியும். அதுவுமில்லாமல் தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் வலிமை மோதும்போது திரையரங்குகள் கிடைப்பதில் இரண்டு படங்களுக்கும் சிக்கல் எழலாம்.

valimai theatrical release date suggestions from theatre owners

எடுத்துக்காட்டாக விஸ்வாசம், பேட்ட படங்களும் சென்ற 2019 பொங்கலுக்கு வெளியான போது திரையரங்குகளை சரிபாதியாக பிடித்ததால் இரண்டு படங்களின் வசூலும் சற்று பாதிக்கப்பட்டது. அதே வேளையில் தளபதி விஜய் தன்னுடைய படங்களை 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பண்டிகை நாட்களில் சோலோவாக மட்டுமே ரிலீஸ் செய்துகொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய படங்களின் வசூல் உடையாமல் வருகிறது.

valimai theatrical release date suggestions from theatre owners

அதே உத்தியை அண்ணாத்த, வலிமை திரைப்படங்களும் பின்பற்றும் பொழுது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வசூல் சாதனையை நிச்சயம் இந்த இரண்டு படங்களும் நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்

தொடர்புடைய இணைப்புகள்

valimai theatrical release date suggestions from theatre owners

People looking for online information on Ajith Kumar, Annaatthe, Kgf 2, Rajinikanth, Valimai will find this news story useful.