www.garudabazaar.com

மரண மாஸ்! பிரம்மாண்ட #KGFChapter2-ன் தென்னிந்திய மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த டிசம்பர் 21, 2018 அன்று, வேற லெவல் திரைக்கதை, இயக்கம் மற்றும் ஆக்‌ஷனால் ஒரு சகாப்தத்தை உருவாக்கியது KGF.

kgf 2 satellite partners official கேஜிஎப்ஃ-2 சாட்டிலைட் உரிமம்

ஆம், யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த "KGF அத்தியாயம்-1" படத்தின் பெருவெற்றிக்கு பின்னர் விமர்சகர்களும் ரசிகர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும்  KGFஅத்தியாயம்-2க்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே இந்த பிரம்மாண்ட KGFஅத்தியாயம்-2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாக செம்ம மாஸான அப்டேட் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

kgf 2 satellite partners official கேஜிஎப்ஃ-2 சாட்டிலைட் உரிமம்

இயக்குநர் பிரசாந்த் நீலின் அதிரடி படமான கேஜிஎஃப்: அத்தியாயம் 2-ல் 'ராக்கிங் ஸ்டார்' யஷ் மீண்டும் கேங்ஸ்டர் ராக்கியாக இந்த படத்தில் நடிக்கிறார்.

நடிகர் ஸ்ரீநிதி ஷெட்டி யஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார், இவரதான் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் அஜய் ஞானமுத்து இயக்கத்திலான கோப்ரா படத்தில் நடிக்கிறார். இதேபோல் KGFஅத்தியாயம்-2 படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், அதீரா, ரவீனா டாண்டன், மாளவிகா அவினாஷ், ராவ் ரமேஷ், 'வட சென்னை' புகழ் சரண் சக்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வரவிருக்கும் பிரம்மாண்ட படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான அதிகாரப்பூர்வ சாட்டிலைட் உரிமத்தை ZEE தொலைக்காட்சி நிறுவனத்தின் - Zee தமிழ் , Zee கன்னடம், Zee கேரளம் மற்றும் Zee தெலுங்கு ஆகிய சேனல்கள் கைப்பற்றியுள்ளன. இந்த மெகா அறிவிப்பினை KGFஅத்தியாயம்-2 படத்தின் நாயகன் யஷ், தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read: கடற்கரையில்... செம ஹாட் போஸ்.. இன்ஸ்டாவில் இளம் தமிழ் நடிகை பதிவிட்ட ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

kgf 2 satellite partners official கேஜிஎப்ஃ-2 சாட்டிலைட் உரிமம்

People looking for online information on KGF, Kgf 2, KGF2Update, KGFRights, KGFUpdate, Prashanth Neel, Trending, Yash, Zee Tamil, ZeeTV will find this news story useful.