www.garudabazaar.com

‘அண்ணாத்த’ பட ஷூட் எங்க நடக்குது?.. Spot-ல இருந்து முக்கிய நடிகர் பகிர்ந்த Viral Photo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, ரஜினியை வைத்து உருவாக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

Rajinikanth Annaatthe Vela Ramamurthy அண்ணாத்த வேல ராமமூர்த்தி

ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் மீண்டும் இணையும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன், வேல ராமமுர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது.

இப்படத்தின் டப்பிங் பணிகள் ஒருபுறம் நடக்க,  இன்னொருபுறம் இப்படத்தின் ரஜினி அல்லாத, படப்பிடிப்பு பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் அண்மையில் வைரலாகின.

அவ்வகையில் கொல்கத்தா ஹவுரா பிரிட்ஜில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகரும் எழுத்தாளருமான வேல ராம மூர்த்தி இயக்குநர் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

Also Read: தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் அறிவிப்பு.. புதிய ஊரடங்கில் தளர்வுகளுடன் அனுமதி!

Rajinikanth Annaatthe Vela Ramamurthy அண்ணாத்த வேல ராமமூர்த்தி

People looking for online information on Ajith Kumar, Annaatthe, Rajinikanth, Superstar Rajinikanth, Thala, ThalaAjith, Vela Ramamurthy will find this news story useful.