www.garudabazaar.com

VALIMAI UPDATE: தல அஜித்துக்கு ரஷ்ய கார் டிரைவர் கொடுத்த பரிசு! எல்லைகள் கடந்த மனித அன்பு!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் - இயக்குனர் எச். வினோத் - யுவன் - நிரவ் ஷா இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் "வலிமை". நேர்கொண்ட பார்வை படத்தின் அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

valimai ajith receives special gift from a local driver

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். இனி வரும் நாட்களில் படத்தின் அனைத்து பாடல்களும் இன்னும் பல போஸ்டர்களும் டீசர், டிரெய்லர்களும் வெளிவர இருக்கின்றன.

valimai ajith receives special gift from a local driver

சில தினங்களுக்கு முன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு  நிறைவடைந்த நாளில் தல அஜித்துக்கு ரஷ்யர் ஒருவர் பரிசு வழங்கி உள்ளார்.

valimai ajith receives special gift from a local driver

அலெக்ஸ் எனும் பெயரைக்கொண்ட அந்த நபர், வலிமை படத்தின் படக்குழுவினருக்கு படப்பிடிப்பில் வாகன ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். ரஷ்ய படப்பிடிப்பில் தொடர்ந்து அஜித்தின் பண்புகளை கவனித்து வந்துள்ளார்.  படபிடிப்பு முடிந்த தருவாயில் இதனால் ஈர்க்கப்பட்டு தல அஜித்திற்கு பரிசாக இரண்டு டி சர்ட்களும், ஒரு தேநீர் குவளையையும், அதனுடன் கொலோம்னா நகரின் பிரபலமான சாக்லெட்டும்  பரிசாக கொடுத்துள்ளார்.

valimai ajith receives special gift from a local driver

அதில் "அஜித் தி பெஸ்ட்" என்றும், கொலோம்னா நகர் உங்களை விரும்புகிறது என்றும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணமாக அலெக்ஸ் கூறுவது "அஜித் மிகவும் பண்புமிக்கவர்" என்பதே அது.

தொடர்புடைய இணைப்புகள்

valimai ajith receives special gift from a local driver

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.