www.garudabazaar.com

நடிகர் கார்த்தியை இயக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குநர்? - பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியை இயக்கப் போவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

arun raja kamaraja to direct karthi அருண்ராஜா காமராஜ் கார்த்தி

நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ்  ‘கனா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த கனா திரைப்படம் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் சிவகார்த்திகேயனுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவருமான அருண்ராஜா காமராஜ், அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்டிகள்15 என்கிற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குவதற்கு தயாரானார்.

arun raja kamaraja to direct karthi அருண்ராஜா காமராஜ் கார்த்தி

போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக கூறப்பட்டது. இதனிடையே அருண்ராஜா காமராஜ் தம்முடைய மனைவியை கொரோனா காலத்தில் இழந்தார். அதன் பின்னர் அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். அந்த மீளா துயரத்தை கடந்து மீண்டு வரும் அருண்ராஜா காமராஜ், தமது அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

எனினும் இந்த படத்தின் இதர படக்குழுவினர் பற்றிய முழுவிபரமும், மற்றும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun raja kamaraja to direct karthi அருண்ராஜா காமராஜ் கார்த்தி

இதனிடையே நடிகர் கார்த்தி, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று புனைவு படைப்பான ‘பொன்னியின் செல்வன்’  திரைப்படத்தில் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அவரே உறுதிப்படுத்தும் வகையில் சமிப்பத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: ‘தேசிய விருது’ வென்ற இயக்குநர் வெற்றிமாறன் பிறந்த நாள்!! இளம் நடிகர் & பிரபலங்கள் வாழ்த்து!

மேலும் செய்திகள்

arun raja kamaraja to direct karthi அருண்ராஜா காமராஜ் கார்த்தி

People looking for online information on Arun Raja Kamaraj, Karthi will find this news story useful.