www.garudabazaar.com

சம்பவம் இருக்கு! .. ஹர்பஜன், லாஸ்லியா, அர்ஜூன் நடிக்கும் Friendship.. வெளியான ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லாக்டவுனுக்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்கள் பலவும் திரையரங்குகளில் வெளியாவதற்கான சூழ்நிலைகள் வந்துவிட்டன.

Harbhajan Losliya Friendship movie release date is out ஹர்பஜன்

கொரோனா காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக லாக்டவுன் நீடித்து வந்த நிலையில் பல திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தன. அதன் பின்னர் ஒவ்வொரு திரைப்படமாக ஓடிடி தளங்களில் வெளியாகத் தொடங்கின.

இதனிடையே லாக்டவுனில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் 50 சதவீத இருக்கைகளுகு அனுமதித்து, திரையரங்குகளை திறக்கலாம் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியதை அடுத்து இந்த செப்டம்பர் மாதம் மட்டும் அதிக படங்கள் திரையரங்கில் வெளியாகி வருகின்றன. மேலும் பல திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில்  விஜய் சேதுபதியின் 3 படங்களான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, இதனை அடுத்து சந்தானத்தின் டிக்கிலோனா, கங்கனா ரனாவத்தின் தலைவி, விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளிலும், ஓடிடிகளிலும் என பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் அறிவிப்புகள் வெளியாகின. இவற்றுள் லாபம், தலைவி, கோடியில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகின்றன.

Harbhajan Losliya Friendship movie release date is out ஹர்பஜன்

இந்த வரிசையில்தான் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் லாஸ்லியா மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் பலர் நடித்திருக்கும் Friendship திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர். 

இந்த படத்துக்கு சாந்தகுமார்.C ஒளிப்பதிவு செய்துள்ளார். D.M.உதயகுமார் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை JPR & Stalin தயாரித்துள்ளனர்.

Also Read: நடிகர் கார்த்தியை இயக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குநர்? - பரபரப்பு தகவல்கள்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Harbhajan Losliya Friendship movie release date is out ஹர்பஜன்

People looking for online information on Friendship, Harbhajan Singh, Losliya, Sathish will find this news story useful.