www.garudabazaar.com

அஜித்-ஷாலினி காதலுக்கு., Code Word என்ன தெரியுமா..? - அந்த ஃபோன்கால் சீக்ரட்ஸை உடைக்கும் பிரபல நடிகர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்-ஷாலியின் காதல் சீக்ரட் குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

அஜித் - ஷாலினியின் காதல் சீக்ரட் | Valimai Actor Ajith - Shalini's Love Secret and code word

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவரும் இணைந்து அமர்களம் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். 

அஜித் - ஷாலினியின் காதல் சீக்ரட் | Valimai Actor Ajith - Shalini's Love Secret and code word

இந்நிலையில் தற்போது அஜித் - ஷாலினியின் காதல் குறித்த சீக்ரட்டான விஷயங்கள் தெரிய வந்துள்ளன. மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனின் ஃபேன் பேஜில், அஜித்-ஷாலினி காதல் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஷாலினி குஞ்சக்கோ போபனுடன் நிறம் படத்தில் நடித்த போது, அஜித் ஷாலியுடன் பேச, போபனின் ஃபோனுக்குதான் கால் செய்வாராம். இப்படி இவர்கள் பேசி கொள்வதற்கு, ஷாலினிக்கு சோனு என்றும்  அஜித்துக்கு ஏ.கே-47 என்று கோட் வொர்டுகள் வைத்து கொண்டு பேசி கொள்வார்களாம். இந்த விஷயத்தை போபன் ஒருநாள் இயக்குநரிடம் சொல்ல, அவரும் விளையாட்டாக ஷாலினியை கிண்டல் செய்ய, ஷாலினியின் முகம் சிவந்தே விட்டதாம்''. அஜித்-ஷாலினியின் காதல் சீக்ரட்ஸ் குறித்து வெளியான இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

அஜித்-ஷாலினி காதலுக்கு., CODE WORD என்ன தெரியுமா..? - அந்த ஃபோன்கால் சீக்ரட்ஸை உடைக்கும் பிரபல நடிகர். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அஜித் - ஷாலினியின் காதல் சீக்ரட் | Valimai Actor Ajith - Shalini's Love Secret and code word

People looking for online information on Ajith Kumar, Kunchacko Boban, Shalini will find this news story useful.