Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

நடிகர் RJ பாலாஜி வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபலமான சொகுசு கார்! விலை எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல நடிகர் R J பாலாஜி விலையுயர்ந்த உலக அள்வில் பிரபலமான சொகுசுக்காரை வாங்கியுள்ளார்.

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

'நந்திதா ஸ்வேதா' வை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்.. கொஞ்சமும் யோசிக்காமல் கொடுத்த தரமான பதிலடி

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.  ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

 

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

 

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்த 2022 ஆம் ஆண்டு  இந்த படம் திரைக்கு வருவதாக ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். RJ பாலாஜி அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே ஷிவானி அறிவித்துள்ளார். வீட்ல விஷேசங்க படத்திற்கு பிறகு RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் 4வது திரைப்படம் இதுவாகும்

இந்நிலையில் RJ பாலாஜி உலக அளவில் பிரபலமான MINI Countryman Cooper S JCW Inspired காரை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 45 லட்சம் முதல் 55 லட்சம் வரை விற்கப்படுகிறது. பெட்ரோலில் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது. மணிக்கு 15 கி மீ மைலேஜ் தரவல்லது. 5 பேர் அமரக்கூடிய வகையில் 2000 cc இஞ்சினுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள Mini Kun ஷோ ரூமில் வாங்கியுள்ளார்.

மலை உடைப்பு , ஆற்று மணல் கொள்ளையை விஜய் என்னைக்காவது கண்டிச்சுருக்காரா? சீமான் கேள்வி

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Bought a New MINI Cooper Country Man Car

People looking for online information on நடிகர் R J பாலாஜி, நானும் ரவுடி தான், ரேடியோ ஜாக்கி, MINI Cooper Country Man Car, RJ Balaji will find this news story useful.