Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

"நாசமா போகுது".. "கோவம் வரும் Bigg Boss".. ஒரு‌ பாட்டுல பஞ்சாயத்தா? முட்டிக்கொண்ட தாமரை - சுஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பெரிய அளவில் டாஸ்க்குகள் இல்லாததால் போரடிக்க வைத்தன.  வழக்கம் போல் வனிதாவின் சண்டைகள், மோதல்கள் தான் ப்ரோமோ உட்பட அனைத்திலும் காட்டப்பட்டது. பார்வையாளர்களும் இதை ஒரு வழக்கமான பிக்பாஸ் போட்டி என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பம் சறுக்கினாலும், பின்பு வந்த எபிஷோட்கள் பட்டையை கிளப்பின.

Big Boss Ultimate Home Fighting thamarai -Suja Varuni Promo

திருடன் போலீஸ் டாஸ்க்

இந்த வாரத்தின் ஆரம்பித்திலேயே வனிதாவை டிரெண்டிங் பிளேயர் என அறிவித்து அவரை நாமினேட் செய்ய முடியாது என்றார் பிக்பாஸ். பின்பு வீட்டின் ரெஸ்ட்ரிக்டட் பகுதியை பயன்படுத்தும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருடன் - போலீஸ் டாஸ்க் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இதில் வனிதா, தாமரை, பாலாஜி, அனிதா, சுருதி, ஷாரிக், சுஜா வருணி ஆகியோர் போலீசாகவும், பாலாஜி முருகதாஸ், அபினய், நிரூப், ஜுலி, அபிராபி, சினேகன் ஆகியோர் களவாணிகளாகவும் இருந்தனர். அடுத்து போலீஸாக இருந்த திருடனாகவும், திருடன் அணி போலீசாகவும் இருந்தது.

"போங்கப்பா என்னால முடியலை" - வனிதா

போலீசாக இருக்கும் வனிதாவின் கிளிப், பிளவுஸ், ஷாரிக்கின் ஷு ஆகியவற்றை திருடி வந்து அடகு வைத்தனர். களவாணிகள் செய்த அலப்பறையால் டயர்டாகி வனிதா தூங்க சென்று விட்டார். இப்படி கலகலவென போய்க்கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று டாஸ்க் இல்லாத நேரத்தில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பெட்ரூமில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அபிராமி, "சரிகம" என பாட, அதை பாட தெரியாமல் 'சரி சரி' என கூட சேர்ந்து பாடுகிறார் தாமரை. இதனை தாமரையின் பக்கத்தில் இருந்து கவனித்த சுஜா வருணி, "அபி நல்ல பாடல்... நாசமா போகுது" என்று கூறியபடியே எழுந்து செல்கிறார்.

தாமரை - சுஜா வாக்குவாதம்

இதனை சற்றும் எதிர்பார்க்காத தாமரை செல்வி, "நான் பாடுவதால் தான் நாசமாயி போகிறதா" என கேட்க, உடனே சுஜா தாமரையை சமாதானப்படுத்த வருகிறார். அப்போது, "நான் கேட்டதைதான் சொன்னேன் உங்களை சொல்லவில்லை" என்று கூறுகிறார் சுஜா வருணி. தாமரையின் அருகில் வந்து "அந்த பாட்டை கெடுப்பதாக இருக்கிறது அதைத்தான் கூறினேன்"  உங்களை குறை கூறவில்லை என்கிறார். அப்போது, "இப்படி பேசினால் எனக்கு பிடிக்காது, கோவம் வரும்" என்று பிக்பாஸிடம் முறையிடுகிறார் தாமரை. அதோடு அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

பச்சை மிளகாய் டாஸ்க்

இதனிடையே பச்சை மிளகாய் சாப்பிடும் டாஸ்க்கை கொடுத்து ஹவுஸ்மேட்டுகளை கலங்க வைத்துள்ளார் பிக்பாஸ். ஒரு போட்டியாளரின் பெயரை சொல்லி அவர் எப்படி என்பது குறித்து பஸர் அடிப்பதற்குள் சம்பந்தப் போட்டியாளர் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் அவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும். இந்த டாஸ்க்கில் அபிராமி, தாமரை செல்வி, அனிதா, சினேகன், ஸ்ருதி என பலரும் தோற்றுப் போய் பச்சை மிளகாயை சாப்பிடுகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Big Boss Ultimate Home Fighting thamarai -Suja Varuni Promo

People looking for online information on Abhirami, BBT, BBT promo, Big Boss Ultimate, Hot Star, Suja varuni, Thamarai Selvi, Thirudan Police will find this news story useful.