'பேட்ட' டைரக்டருடன் தனுஷ் இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 07, 2019 03:00 PM
‘அசுரன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D40 திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் D40 திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த 2 மாதங்களாக லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சூப்பர் டீலக்ஸ் அஸ்வந்த் அசோக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பாக சஷிகாந்த் தயாரிக்கிறார்.
இந்நிலையில், லண்டனில் சுமார் 64 நாட்களாக இடைவிடாமல் நடைபெற்ற மிக நீளமான, கடினமான ஷூட்டிங் நிறைவடைந்ததாக D40 திரைப்படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இப்படம் குறித்து அறிவிக்கும்போதே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை இது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.