''உடனே கடையைத் திறங்க, வந்துட்டேன்யா வந்துட்டேன்..”இது வேற வேற லெவல் வடிவேல் வெர்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்வடிவேலு இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு நடிகர் வடிவேலு தமிழக மக்களின் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்துள்ளார். நாளொரு மீம்ஸும் பொழுதொரு டாக்ஸுமாக வலம் வரும் லெஜண்ட் வடிவேலுதான் நெட்டிசன்களின் உயிர்நாடி.

இந்நிலையில் அண்மையில் ஒரு புதிய ட்விட்டர் கணக்கை அதிரடியாகத் திறந்துள்ளார் இந்த வைகைப் புயல். தனது முதல் பதிவாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அசத்தும் கெட்டப்பில் சிறப்பான ஒரு சம்பவம் செய்துள்ள வடிவேலு, அதில் கூறியிருப்பது ‘ ஹலோ ட்விட்டர் ஃபேன்ஸ், எல்லோருக்கும் வணக்கம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து இதுல அக்கவுண்ட் ஓபன் பண்ணச் சொன்னாங்க. என்கிட்டதான் பேங்க் அக்கவுண்ட் இருக்குன்னு சொன்னேன். அப்பறம் ட்விட்டர்லன்னு சொன்னாங்க. அந்த பேங்க்ல பணத்தை பரிமாறலாம், இதுல அன்பை பரிமாறலாம். உடனே கடையைத் திறங்க, சந்திச்சே ஆகணும். இனி நாம இங்க அடிக்கடி பேசிக்கலாம், இடையில சின்ன கேப் விழுந்துடுச்சு. விரைவுல உங்களை சந்திப்பேன்’ என்று காமெடி தெறிக்கக் கூறியுள்ளார் வடிவேலு.
வடிவேலுவை வைத்து மீம்ஸ் போட்டாலே லைக்குகள் அள்ளும், இந்நிலையில் வடிவேலுவே நேரடியாக வந்த இந்த வீடியோ ட்வீட், லைக்குகளை அள்ளிக் குவித்து சோஷியல் மீடியாவில் வைரலோ வைரல் ஆகி வருகிறது.
பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏
என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு 🙏#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் 🙏 pic.twitter.com/dSjWRr0kVs
— Actor Vadivelu (@VadiveluOffl) March 20, 2020