''வைரஸாக வந்த நீ, பாடம் புகட்டிவிட்டாய்'' - நடிகர் வடிவேலு பாடிய உருக்கமான பாடல் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்து பாடிய பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தில் ஹீரோவாக பட்டையை கிளப்பினார். மேலும் தற்போது வரை பல மீம் க்ரியேட்டர்களுக்கு வடிவேலு தான் டெம்ப்ளேட் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலுவின் கொரோனா வைரஸ் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது. மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து அவர் ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020
Tags : Vadivelu, Coronavirus, Song