டைரக்டர் சுந்தர்.சிய இப்படியும் சொல்லலாமா ? வைரலாகும் மீம் - குஷ்புவின் Reaction-ஐ பாருங்க !
முகப்பு > சினிமா செய்திகள்நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் குஷ்பு இணைந்துள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'நகரம்' படத்தில் காமெடி காட்சி ஒன்றில் சுந்தர்.சியை தவிர்க்க, அவரை கண்டும்காணாதது போல் வடிவேலு கடந்து செல்வார். முதலில் அவரை பார்க்கும் சுந்தர்.சி, பின்பு பார்க்காதது போல் நடிப்பார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சுந்தர்.சி வடிவேலுவை பார்க்கும்போது, Sundar See என்றும், வடிவேலுவை பார்க்காத போது, Sundar didn't See என்றும் மீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்த நடிகை குஷ்பு, சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த மீம் வைரலாகி வருகிறது.
🤣🤣🤣🤣🤣🙏 https://t.co/3WKxBnghUb
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 31, 2020