www.garudabazaar.com

வந்துட்டான்யா வந்துட்டான்யா.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vadivelu Naai Sekar Returns OTT Release Date Announced

Also Read | மங்காத்தா & துணிவு படங்களுக்கு ரிலீஸ்ல இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம 😍

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.

'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Vadivelu Naai Sekar Returns OTT Release Date Announced

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை செனனையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது‌.

Vadivelu Naai Sekar Returns OTT Release Date Announced

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.

Vadivelu Naai Sekar Returns OTT Release Date Announced

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை (06.01.2023) முதல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "வந்துட்டான்யா வந்துட்டான்யா" என நெட்பிளிக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Also Read | உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸாகும் அஜித்குமாரின் 'துணிவு'.. மாஸ் சம்பவம் 🔥

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Naai Sekar Returns OTT Release Date Announced

People looking for online information on Naai Sekar Returns, Naai Sekar Returns OTT Release, Vadivelu will find this news story useful.