www.garudabazaar.com

நோ மேக்கப்.. நோ பில்ட்டர்.. தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு நடிகை குஷ்பு வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு .

Kushbu Shared Her New Profile Photo with Caption

Also Read | "மனசு நெறஞ்சுருக்கு, கனவும் பலிச்சுடுச்சு".. 15 வயதில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!!..

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கோண்டவர். பின் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

Kushbu Shared Her New Profile Photo with Caption

தமிழ் ரசிகர்களிடையே நல்ல பிரபலமான இவர் அரசியலிலும் குத்தித்தார். திமுக, காங்கிரஸில் இருந்த இவர் தற்போது பாஜகவில் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வகித்தவர்.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் குஷ்பு நடித்துள்ளார்.

Kushbu Shared Her New Profile Photo with Caption

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீரா சீரியலுக்கு முன்பு,  கோகுலத்தில் சீதை, சிவகாமி , நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kushbu Shared Her New Profile Photo with Caption

இந்நிலையில் குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய முகப்பு படத்தை மாற்றியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். அதற்கு தலைப்பாக, உங்கள் "உண்மையான முகத்தை காட்ட தயங்காதீர்கள்" என தலைப்பிட்டு மேக்கப் & பில்ட்டர் போடாத புகைப்படத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

 

Also Read | விஜய் சேதுபதியுடன் ‘காந்தி டாக்ஸ்’ .. BTS ஃபோட்டோ பகிர்ந்து நடிகர் சொன்ன கமெண்ட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Kushbu Shared Her New Profile Photo with Caption

People looking for online information on Kushboo Sundar will find this news story useful.