www.garudabazaar.com

ரௌடி பேபி.. பாடலுக்கு அப்படியே டான்ஸ் ஆடிய அமெரிக்கர்..வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரௌடி பேபி பாடலுக்கு அமெரிக்க இளைஞர் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

US man nails Dhanush iconic steps from Rowdy Baby song

Also Read | Rocketry: The Nambi Effect - ‘ராகெட்ரி’ வரவேற்பு.. ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற மாதவன் - வைரலாகும் வீடியோ

மாரி

நடிகர் தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்து வெளிவந்த படம் மாரி-2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத் குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மாரி படத்தின் சீக்குவலாக இரண்டாம் பாகம் வெளியானது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான இந்த மாரி -2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், இந்த படத்தின் பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

US man nails Dhanush iconic steps from Rowdy Baby song

ரௌடி பேபி

குறிப்பாக படத்தில் வரும் ரௌடி பேபி பாடல் பலரையும் கிறங்கடித்தது என்றே சொல்லவேண்டும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் துவங்கி பல நடிகை, நடிகர்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இப்பாடல் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் நடிகர் தனுஷ் - சாய் பல்லவியின் நடனம் என்றே சொல்லவேண்டும்.

வைரல் வீடியோ

இதனிடையே இந்த பாடல் வெளிநாடுகளிலும் மொழி கடந்து வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சேர்ந்தவரான சீன் டெனெடின் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மாரி -2 படத்தில் வரும் ரௌடி பேபி பாடலுக்கு தத்ரூபமாக அவர் நடனமாடுகிறார். தனது அறையை விட்டு பாடலை கேட்டபடி வெளியே வரும் அவர், வாசலில் பாடலுக்கு நடனமாடுவது போல வீடியோ அமைந்திருக்கிறது.

US man nails Dhanush iconic steps from Rowdy Baby song

இந்த வீடியோவில் அவரது நடன அசைவுகள் பலரையும் திகைக்க வைத்திருக்கின்றன. இதனிடையே இந்த வீடியோவை 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | சிம்பு - PBS நடிக்கும் 'பத்து தல'.. இந்த ஊர்ல தான் ஷூட்? BTS போட்டோவுடன் வெளிவந்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

US man nails Dhanush iconic steps from Rowdy Baby song

People looking for online information on Dhanush, Dhanush iconic steps, Rowdy Baby Song, US man will find this news story useful.