www.garudabazaar.com

தனுஷ் Birthday Special.. "இத விட எப்படிங்க சர்ப்ரைஸ் பண்றது?.." நடிகர் பிரசன்னா பகிர்ந்த 'வீடியோ'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் அறிமுகமாகி, இன்று ஹாலிவுட் வரை கால் பதித்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ்.

prasanna shares special video for dhanush birthday

சமீபத்தில், இவர் Russo Brothers இயக்கத்தில் ஹாலிவுட்டில் நடித்திருந்த 'தி கிரே மேன்' எனும் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'திருச்சிற்றம்பலம்' திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதன் பின்னர், வாத்தி, கேப்டன் மில்லர், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷின் பிறந்த நாளான இன்று (28.07.2022), ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனார். மேலும், நானே வருவேன் படத்தின் போஸ்டர், வாத்தி படத்தின் போஸ்டர் மற்றும் டீசர், கேப்டன் மில்லர் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் என அடுத்தடுத்து பல அதிரடி அப்டேட்களும் வெளியாகி இருந்தது.

இதனிடையே, நடிகர் தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக, நடிகர் பிரசன்னா தனுஷுக்கு வேற லெவலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பிரசன்னா, "இன்னும் அதிக உயரத்திலும், இன்னும் நிறைய சந்தோஷத்துடன் நீங்கள் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதைவிட அழகான ஒன்றை அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு எப்படி பகிர முடியும்?. இதை பகிர்ந்ததற்காக என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் 🤩. அதிக நாளாக நான் இந்த வீடியோவை வைத்துள்ளேன்" என பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வித்தியாசமான நடிப்பில் ஜொலித்த நடிகர் தனுஷ், பியானோ வாசிப்பது தொடர்பான வீடியோவும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளது.

தனுஷ் BIRTHDAY SPECIAL.. "இத விட எப்படிங்க சர்ப்ரைஸ் பண்றது?.." நடிகர் பிரசன்னா பகிர்ந்த 'வீடியோ'.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

prasanna shares special video for dhanush birthday

People looking for online information on Dhanush, Dhanush birthday, Prasanna will find this news story useful.