திமுகவின் இளைஞரனி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி, திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன்.
பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன்.
பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன்.
— Udhay (@Udhaystalin) July 4, 2019