‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ மோஷன் போஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 20, 2019 01:56 PM
நடிகர் தினேஷ் நடித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ரித்விகா, ஆனந்தி, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.
கிஷோர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தென்மா இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரை குறிக்கும் விதமாக இப்படத்தில் குண்டுகளும், தினேஷ் அணிந்திருக்கும் ஆடையில் அமெரிக்க தேசிய கொடியும், சோவியத் யூனியனை குறிக்கும் கமியூனிச கொடியும் இடம்பெற்றுள்ளன.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், கலை இயக்குனராக இராமலிங்கம், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிகின்றனர்.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ மோஷன் போஸ்டர் வீடியோ