www.garudabazaar.com

"Fight சீன்ல, அதிக உதை வாங்குனது நிதி தான்”.. ”இனி தமிழ்ல நடிப்பாங்களா..".. உதய் கலகல பேச்சு😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.

Udhayanidhi stalin about Nidhhi Agerwal in kalaga thalaivan movie

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகும் கலகத்தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

Udhayanidhi stalin about Nidhhi Agerwal in kalaga thalaivan movie

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகி உள்ளது. மக்கள் மத்தியில் இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது.

அப்போது பேசிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "2019 ஆம் ஆண்டு கலகத் தலைவன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதன் பின்பு தான், நான் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நடிப்பதற்காக சென்றேன். அதனை முடித்து அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தில் வேலை இருப்பதாக அழைத்த போது தான் இப்படி ஒரு படம் நான் செய்ததே எனக்கு ஞாபகம் வந்தது.

Udhayanidhi stalin about Nidhhi Agerwal in kalaga thalaivan movie

ஒரு சிறிய சீனை முழு நாளும் எடுப்பார் மகிழ் திருமேனி. அந்த சீன் முடிந்து விட்டது, அடுத்த சீன் போக போகிறோம் என ஆரம்பித்து சீன் பேப்பரைப் பார்த்தால் அதே சீன் பேப்பர் இருக்கும். 'யோ இதுதானே நேத்து எடுத்தீங்க' அப்படின்னு தோணும். அவர் (மகிழ் திருமேனி) அப்படி ஸ்லோவா தான் படம் எடுப்பாரு. படத்தை செதுக்கி வெச்சு இருக்காரு" என்றார்.

Udhayanidhi stalin about Nidhhi Agerwal in kalaga thalaivan movie

தொடர்ந்து, நடிகை நிதி அகர்வால் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், "நிதி அகர்வால் திருப்பி தமிழ்ல படம் நடிப்பாங்களான்னு எனக்கு தெரியல. Fight சீன்லலாம் என்னை விட அவங்கதான் அதிகமா அடி, உதை வாங்குனாங்க. ஆல் தி பெஸ்ட் நிதி" என தெரிவித்தார்.

"FIGHT சீன்ல, அதிக உதை வாங்குனது நிதி தான்”.. ”இனி தமிழ்ல நடிப்பாங்களா..".. உதய் கலகல பேச்சு😍 வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin about Nidhhi Agerwal in kalaga thalaivan movie

People looking for online information on Kalaga Thalaivan, Magizh Thirumeni, Nidhhi Agerwal, Udhayanidhi Stalin will find this news story useful.